கோத்தா கினாபாலு நவ 3: சபா மாநில சட்டமன்ற தேர்தலையொட்டி சபா மக்கள் கூட்டணியான ஜி.ஆர்.எஸ் அதன் வேட்பாளர்களை எதிர்வரும் நவம்பர் 11 அல்லது 12ஆம் தேதிகளில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாநில தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டுவிட்டதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருப்பதாகவும் அக்கூட்டணியின் தலைவர் டத்தோஶ்ரீ ஹஜிஜி நோர் கூறினார்.
வேட்புமனுத்தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னர், அதாவது நவம்பர் 11 அல்லது 12ஆம் தேதிகளில் வேட்பாளர் அறிவிப்பு செய்யப்படலாம் என்று அவர் குறிப்பிட்டார்.
சபா மாநில சட்டமன்ற தேர்தலின் வேட்புமனுத்தாக்கல் எதிர்வரும் நவம்பர் 15ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் 17ஆவது சபா மாநில சட்டமன்ற தேர்தல் நவம்பர் 29ஆம் தேதி நடைபெறவுள்ளது.
வேட்புமனுத்தாக்கல் நிறைவு பெற்றவுடன் ஓரிரு நாட்களில் தேர்தல் வாக்குறுதிகள் வெளியிடப்படும் என்று அவர் சொன்னார்.




