கோலாலம்பூர், நவ 3- சூடான் நாட்டின் எல்- ஃபஷெர், டர்ஃபுர் ஆகிய இரு பகுதிகளில் ஏற்பட்டுள்ள வன்முறை வெறியாட்டம் காரணமாக அந்நாட்டில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக சூடான் நாட்டில் ஏற்பட்டுள்ள வன்முறை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக்கொண்டார்.
மனித உரிமைக்கு எதிராக பல்லாயிரம் மக்கள் அங்கு கொன்று குவிக்கப்பட்டு வருவதாலும் சிலர் நாட்டை விட்டு புலம்பெயர்ந்து கொண்டிருப்பதாகவும் வரும் தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அன்வார் குறிப்பிட்டார்.
ஆக, சூடானில் வன்முறை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று மலேசியா வலியுறுத்துகிறது. பாதிக்கப்பட்ட சூடான் மக்களுடன் மலேசியா தொடர்ந்து பக்கபலமாக இருந்து வருவதாகவும் அனைத்துலக சமூகங்கள் இணைந்து இந்த வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.




