கோலாலம்பூர், நவ 3- நாட்டிலுள்ள ஆறு மாநிலங்களில் இன்று மாலை வேளையில் கனமழை, பலத்த காற்று வீசும் என்று மலேசிய வானிலை ஆய்வு துறையான மெட் மலேசியா தகவல் தெரிவித்துள்ளது.
மாலை 4 மணி தொடங்கி கனமழை, பலத்த காற்று வீசும். கெடா மாநிலத்தின் சிக், பாலிங் மாவட்டங்களிலும் பினாங்கு மாநிலத்தின் பாராட் டாயா, திமோர் லவுட் மாவட்டங்களிலும் இதே வானிலை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல், பேராக் மாநிலத்தின் கிரியான், லாருட் மாத்தாங், செலாமா, உலு பேராக், கோல கங்சார். கிந்தா, கம்பார் மற்றும் பகாங் கேமரன் பகுதிகளிலும் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மலேசியாவான சபா, சரவாக் மாநிலங்களிலும் மாலை வேளையில் இதே நிலை நீட்டிக்கும் என்று மெட் மலேசியா முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளது.




