ஷா ஆலம், நவம்பர் 3 — கிள்ளான் கம்போங் ஜாவாவில் இயங்கிய ஒரு பர்கர் இறைச்சி தயாரிக்கும் தொழிற்சாலை உரிய வணிக உரிமம் இன்றி செயல்பட்டதற்காக உடனடியாக மூட உத்தரவிடப்பட்டது என்று கிள்ளான் மாநகர மன்ற தகவல் துறை இயக்குநர் நோர்ஃபிசா மஹ்ஃபிஸ் தெரிவித்தார். சோதனையில், அந்த தொழிற்சாலை உரிமையாளர் இந்தோனேசியா மற்றும் வங்காளதேச நாட்டு குடிமக்களை உணவுத் துறையில் வேலை செய்ய அனுமதி இன்றி பணியமர்த்தியது கண்டறியப்பட்டது.
“உரிய வணிக அனுமதிப் பத்திரம் இல்லாமல் இயங்கியதால், அந்த இடம் உடனடியாக மூடப்பட்டதுடன், கிள்ளான் மாநகர மன்ற 2007 வணிக, தொழில் மற்றும் வர்த்தக அனுமதி சட்டத்தின் கீழ் RM1,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது,” என அவர் தி ஸ்டார் நாளிதழுக்கு தெரிவித்தார்.
மேலும் அதிக சத்தம் குறித்துப் பொதுமக்களிடமிருந்து வந்த புகாரின் அடிப்படையில், உரிமம், சுகாதாரம் மற்றும் அமலாக்கப் பிரிவுகளின் அதிகாரிகள் இணைந்து மேற்கொண்ட சோதனையின் போது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.




