ஷா அலம், நவம்பர் 3 - தாய்லாந்தின் சுங்கை கோலோக் பகுதியில் நேற்று மலேசிய ஆடவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையதாக நம்பப்படும் ஒருவரை அந்நாட்டு அதிகாரிகள் நேற்றிரவு கைது செய்துள்ளனர்.
30 வயது குற்றவாளியான அந்த ஆடவர் சுங்கை கோலோக் போலீஸ் நிலையத்தில் தானாகவே சரணடைந்தபின் கைது செய்யப்பட்டதாக பாதுகாப்பு படை தெரிவித்தது.
“விசாரணையில் அந்த ஆடவருக்கு தாய்லாந்து மற்றும் மலேசியா என இரட்டை குடியுரிமை இருப்பது தெரியவந்தது. அவர் நேற்றிரவு சரணடைந்த உடனே காவலில் எடுக்கப்பட்டார்,” என்று அந்த வட்டாரம் தெரிவித்ததாக ஹரியான் மெட்ரோ செய்தி வெளியிட்டுள்ளது.
நேற்று, நகை மற்றும் பை வியாபாரியான முகமது ஃபூவாட் ஃபஹ்மி கசாலி (33) தன் வீட்டில் இரண்டு நபர்களால் துப்பாக்கியால் 18 தடவைசுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவித்தனர். சுங்கை கோலோக் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போது இரவு 9 மணியளவில் மரணமடைந்ததாக உறுதி செய்யப்பட்டது.




