ஷா ஆலம், நவ 3: இன்று 2025ஆம் ஆண்டுக்கான மலேசிய கல்வி சான்றிதழ் (எஸ்.பி.எம்) தேர்வு தொடங்கியது. நாடு முழுவதும் 3,350 மையங்களில் 413,372 மாணவர்கள் இத்தேர்வுக்கு அமரவுள்ளனர்.
மேலும், தேர்வு சீராக நடைபெற 127,526 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என மலேசியக் கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இயற்கை பேரிடர் அல்லது நோய் பரவல் போன்ற அவசர நிலைகளுக்கு தயாராக இருப்பதாகவும், பாதிக்கப்பட்ட மாணவர்கள் தங்கள் பள்ளி அல்லது மாநிலக் கல்வித் துறைக்கு (JPN) உடனடியாக தகவல் தெரிவிக்குமாறும் கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
தேர்வு அட்டவணை பின்வருமாறு:
மலாய் வாய்மொழி தேர்வு: நவம்பர் 3–6
ஆங்கில வாய்மொழி தேர்வு: நவம்பர் 10–13
அறிவியல் செயல்திறன் தேர்வு: நவம்பர் 17–19
மலாய் & ஆங்கில மொழி கேட்டல் திறன் தேர்வு : நவம்பர் 20
எழுத்துத் தேர்வு: நவம்பர் 25 – டிசம்பர் 23
மாணவர்கள் தேர்வின் தேதி, நேரம், குறியீடு மற்றும் பாடப் பெயர்களை அறிந்து கொள்ள தேர்வு அட்டவணையை கவனித்து செயல் பட கல்வி அமைச்சு நினைவூட்டியுள்ளது.




