சிலாங்கூர் பாரம்பரிய உணவுத் திருவிழா — கலாச்சாரத்தையும் சமூக ஒற்றுமையையும் வெளிப்படுத்தும் மேடை
கோலா சிலாங்கூர், நவம்பர் 1 — இன்றைய சிலாங்கூர் பாரம்பரிய உணவுத் திருவிழா, மாநிலத்தின் செழுமையான கலாச்சார அடையாளத்தையும் பல்வகை சமூகங்களின் ஒற்றுமையையும் வெளிப்படுத்தும் ஒரு முக்கிய மேடையாக அமைந்தது.
மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி அவர்கள், இந்த நிகழ்ச்சி கோலா சிலாங்கூரின் சுற்றுலா டூரிசம் வளர்ச்சியை மேலும் ஊக்குவிக்கும் கூறுகளையும் வெளிப்படுத்துவ- தாக தெரிவித்தார்.
“இது நான்காவது ஆண்டாக நடைபெறும் உணவுத் திருவிழா. ஒவ்வொரு ஆண்டும் தனித்தன்மையை வெளிப்படுத்துவதே எங்கள் நோக்கம். இந்த முறை, நாங்கள் ‘லெம்பெங் சாஹூ பிஜி மாத்தா ஈக்கான்’ மற்றும் குய் பெப்பா பூட் என்ற பாரம்பரிய பூகிஸ் பலகாரத்தை சிறப்பாக அறிமுகப் படுத்துகிறோம்,” என்று அவர் தெரிவித்தார்.
“முன்னதாக நாங்கள் நாசி அம்பெங், சாத்தே காஜாங், மற்றும் புன்தென் போன்ற உணவுகளை முன்னிறுத்தி இருந்தோம். பூகிஸ் இன உணவுகளை அறிமுகப்படுத்துவதன் மூலம், கோலா சிலாங்கூரின் டூரிசம் வளர்ச்சியில் கலாச்சார கூறுகளும் பங்களிப்பதைக் காண்கிறோம்,” என்றும் அவர் கூறினார்.
அமிருடின், இந்த உணவு திருவிழா இந்தப் பகுதியின் வளர்ச்சியையும், பல இன, பல மத சமூகங்களின் ஒற்றுமையையும், அவர்களின் வரலாறு மற்றும் பாரம்பரியத்தையும் பிரதிபலிப்பதாக குறிப்பிட்டார்.
மலேசியா சாதனைப் புத்தகத்தில் இரண்டு சாதனைகள்மாநில கலாச்சார ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ போர்ஹான் அமான் ஷா கலந்து கொண்ட இந்த விழாவில், மலேசியா சாதனைப் புத்தகம் (MBOR) இரண்டு சாதனைகளைக் குறிப்பிட்டது.
முதல் சாதனையாக, 4,921 துண்டு ‘லெம்பெங் சாகூ பிஜி மாத்தா ஈக்கான்’ என்ற உணவு இதுவரை பதிவான மிக அதிக அளவு என அங்கீகரிக்கப்பட்டது.
இரண்டாவது சாதனையாக, 55,000 குய் பேப்பா புட் 25 மீட்டர் உயரம் கொண்ட கோலா சிலாங்கூர் கலங்கரை விளக்கத்தின் மாதிரி தூண் வடிவமைப்பு உருவாக்கப்பட்டது.
இது புஸ்பனிதா சிலாங்கூர் உடன் இணைந்து இது செய்யப்பட்டது.
இதற்கான சான்றிதழை MBOR அதிகாரி மேகட் பாரிஸ் மேகட் முஸாஃபர் ஷா வழங்கினார், அதை அமிருடின் மற்றும் போர்ஹான் பெற்றுக்கொண்டனர்.
பாரம்பரிய உணவின் வழி டூரிசம் வளர்ச்சி அமிருடின் தனது உரையில், இந்த திருவிழாவின் வெற்றி சிலாங்கூர் மாநிலம் பொருளாதார ரீதியாக முன்னேறியதோடு, தனது பாரம்பரிய-த்தையும் மதிக்கும் மாநிலம் என்பதை நிரூபித்ததாக கூறினார்.
“உணவியல் டூரிசம் (Gastronomic Tourism) என்பது சிலாங்கூரை அழகான மற்றும் நவீன மாநிலமாக மட்டுமல்லாமல், பாரம்பரிய சுவைகளும் கலாச்சார பன்மையும் நிறைந்த இடமாக உருவாக்க முக்கிய பங்காற்றுகிறது,” என்றார்.
சிறந்த பவிலியன் விருதுகள்
அதே நிகழ்வில், சிறந்த பவிலியன் விருது (Best Pavilion Award)
கோலா லாங்காட் நகரசபைக்கு வழங்கப் பட்டது. அவர்கள் முதல் இடத்தைப் பெற்று RM1,500 பரிசு பெற்றனர்.
சுபாங் ஜெயா மாநகர சபை இரண்டாம் இடம் பெற்று RM1,000 பெற்றது.
அதே சமயம் பெட்டாலிங் ஜெயா மாநகர சபை மூன்றாம் இடம் பெற்று RM800 பரிசு பெற்றது.
இந்த விழா, சிலாங்கூரின் சமையல் பாரம்பரியத்தை உலகிற்கு அறிமுகப் படுத்துவதோடு, சமூக ஒற்றுமை, பாரம்பரியம், மற்றும் டூரிசம் வளர்ச்சியை ஒருங்கிணைக்கும் மாநிலத்தின் நோக்கத்தையும் வலியுறுத்துகிறது.







