பந்திங், நவ 2: பந்திங் சட்டமன்ற தொகுதியின் தீபாவளி பொது உபசரிப்பு இன்று நவம்பர் 2ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சுங்கை மங்கிஸ் பொது மண்டபத்தில் சிறப்பாக நடந்தேறியது.
பந்திங் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மனிதவள மற்றும் வறுமை ஒழிப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு பாப்பா ராய்டு வீரமான் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இந்த பொது உபசரிப்பு நிகழ்ச்சியில் மூவின மக்கள் கலந்து சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியில் அதிர்ஷ்ட குலுக்கல் அங்கமும் இடம்பெற்று பொதுமக்கள் தொலைக்காட்சிப் பெட்டி, சலவை இயந்திரம், மூக்குத்தி, மிதிவண்டி மற்றும் பல பரிசுகளை வெற்றிக் கொண்டனர்.
மேலும், வீ. பாப்பாராய்டுவின் தேர்தல் வாக்குறுதிக்கு ஏற்ப, பள்ளிகளில் புறப்பாட பாடங்களில் சிறந்த திறமை பெற்ற மாணவர்களுக்கு சுமார் RM200 ரொக்கம் வழங்கப்பட்டது. இந்த முயற்சி மாணவர்களுக்கு கல்வியில் மேலும் ஊக்கம் மற்றும் ஆர்வத்தை அதிகரிக்கும் என்று அவர் கூறினார்.
இந்த தீபாவளி பொது உபசரிப்பில் பந்திங் சட்டமன்றச் சமூக சேவை மைய ஏற்பாட்டு உறுப்பினர்கள், மாவட்ட அலுவலர்கள் ஐ-சிட் தலைவர், இந்திய தலைவர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
பந்திங் சட்டமன்றத் தொகுதியின் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு மிக சிறப்பாக நடைபெற்றது
2 நவம்பர் 2025, 7:58 AM






