புத்ராஜெயா, நவம்பர் 1 : மலேசியாவில் 2024 ஆம் ஆண்டில் பட்டதாரிகள் எண்ணிக்கை 5.98 மில்லியனாக உயர்ந்துள்ளது. அதே சமயம், வேலையில்லா பட்டதாரிகள் விகிதம் 3.2 சதவீதமாக குறைந்தது என்று மலேசிய புள்ளி விவரத் துறை (DOSM) வெளியிட்ட 2024 பட்டதாரி புள்ளிவிவர அறிக்கை தெரிவித்துள்ளது.
முக்கிய புள்ளிவிவர நிபுணர் டத்தோ’ ஸ்ரீ மொஹித் உசீர் மஹிதீன் தெரிவித்ததாவது, 2024 ஆண்டு முழுவதும் நிலைத்திருக்கும் பொருளாதார வளர்ச்சியும், உறுதியான வேலைவாய்ப்பு சந்தையும் பட்டதாரிகள் எண்ணிக்கையை உயர்த்தியுள்ளன. இது தற்போது தொழில் வயதுக்குட்பட்ட 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மக்கள் தொகையில் 22.3% ஆக உள்ளது.
“இந்த மொத்த எண்ணிக்கையில், 5.14 மில்லியன் பேர் தொழில் துறையில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் பட்டதாரிகளின் தொழில்துறை பங்கேற்பு விகிதம் (GLFPR) 86 சதவீதம் என உயர்ந்துள்ளது,” என அவர் குறிப்பிட்டார்.
இவர்களில், பட்டதாரிகள் (Degree Holders) 54.9 சதவீதம் (3.28 மில்லியன்) மற்றும் டிப்ளோமா பெற்றவர்கள் 45.1 சதவீதம் (2.70 மில்லியன்) ஆக உள்ளனர்.
2024 ஆம் ஆண்டில் பட்டதாரிகள் 5.4 சதவீதமும், டிப்ளோமா பெற்றோர் 3.2 சதவீதம் அதிகரித்து உள்ளது.
பட்டதாரி வேலைவாய்ப்பு வலுப்படுத்தும் மடாணி அரசு
மடாணி அரசு, பட்டதாரிகளின் வேலை வாய்ப்பை மேம்படுத்த பல நடவடிக்கைகளை 2024 நிதியாண்டில் எடுத்துள்ளது.
அதில் முக்கியமாக, மனிதவள மேம்பாட்டு கழகம் (HRD Corp) மூலம் RM2 பில்லியன் நிதியை புதிய பட்டதாரிகளின் சம்பளத்துக்காக திறந்து வைத்துள்ளது.
மேலும், பட்டதாரிகள் பயிற்சி மற்றும் நியமன திட்டம் (MySTEP) தொடர்ச்சியாக செயல் படுத்தப் படுகிறது.
“இவை அனைத்தும் உயர்நிலை அறிவார்ந்த பணியாளர்களை உருவாக்கும் அரசின் தொடர்ச்சியான உறுதியைக் காட்டுகிறது,” என உசீர் மஹிதீன் கூறினார்.
வேலை பெற்ற பட்டதாரிகள் 4.98 மில்லியனாக உயர்வு
2024ஆம் ஆண்டில் வேலை பெற்ற பட்டதாரி- கள் எண்ணிக்கை 4.98 மில்லியனாக உயர்ந்துள்ளது (2023: 4.76 மில்லியன்).
இவர்களில் சுமார் 67.8 சதவீதம் 3.38 மில்லியன் பேர் திறமையான (Skilled) பிரிவில் பணியாற்றுகின்றனர். அவர்களில்,·57.2% தொழில் முனைவோர் (Professionals)·24.4% தொழில்நுட்பங்கள் மற்றும் இணை நிபுணர்கள்·18.4% மேலாளர்கள்.
மேலும், 31% (1.54 மில்லியன்) பேர் அரைத் திறமையுடன் (Semi-skilled) பணிபுரிகின்றனர்.
மீதமுள்ள 1.2% (57,500 பேர்) மட்டுமே குறைந்த திறமை (Low-skilled) பணிகளில் உள்ளனர்.
பணித் துறைப் பிரிவுகள்பட்டதாரிகள் பணிபுரியும் துறைகள்:·சேவைத் துறை — 77.6% (3.86 மில்லியன்)
·தயாரிப்பு (Manufacturing) — 13.4% (667,300)· கட்டுமானம் (Construction) — 6.3% (313,100)· விவசாயம் — 1.7% (83,900)·
சுரங்கம் மற்றும் குவாரி — 1.0% (49,200)
திறமையுடன் பொருந்தாத வேலைவாய்ப்பு குறைந்தது
தங்கள் கல்வித் தகுதிக்கு குறைவான பணிகளில் பணிபுரியும் பட்டதாரிகள் 2024 ஆம் ஆண்டில் 1.6 மில்லியனாக (32.2%) இருந்தனர். இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது குறைவு.
“இதன் மூலம் மலேசியா தென் கொரியா(36.8%),
இந்தோனேசியா (42.2%) மற்றும்
பிலிப்பைன்ஸ் (56.7%)
ஆகியவற்றை விட சிறந்த நிலையைப் பெற்றுள்ளது,” என அவர் குறிப்பிட்டார்.
பெண்கள் பங்கேற்பு மற்றும் சம்பள உயர்வு
2024ஆம் ஆண்டில், பெண் பட்டதாரிகள் தொழில்துறை பங்கேற்பு விகிதம் 83.4 சதவீதமாக உயர்ந்தது.
இது தேசிய பெண் தொழிலாளர் விகிதமான 56.2% ஐ விட குறிப்பிடத்தகுந்த அளவில் அதிகமாகும்.
பட்டதாரிகளின் மாதச் சம்பளமும் உயர்ந்துள்ளது:·
மத்திய(Median)சம்பளம் -RM4,521 (2.5% உயர்வு)·
சராசரி (Mean) சம்பளம் — RM5,330 (8.1% உயர்வு)
அதில் அதிக சம்பளம் பெற்ற மாநிலங்கள்:
1.கோலாலம்பூர்- RM5,8882.
புத்ராஜெயா- RM5,7233.
சிலாங்கூர்- RM5,207
வேலைஇல்லாமை குறைந்தது
2024ஆம் ஆண்டில் பட்டதாரி வேலை இல்லாமை விகிதம் 3.2% ஆகக் குறைந்தது (2023: 3.4%). வேலையில்லா பட்டதாரிகள் எண்ணிக்கை 165,900 ஆக குறைந்தது
(2023: 167,300).“வேலை தேடும் பட்டதாரிகளில் 61.1 சதவீதம் மூன்று மாதங்களுக்குள் வேலை பெற்றுள்ளனர்,” என உசீர் மஹிதீன் தெரிவித்தார்.
மொத்தத்தில், பட்டதாரி வேலைவாய்ப்பு உயர்வும், சம்பள வளர்ச்சியும், பெண் பங்கேற்பு விகித உயர்வும் மலேசியாவின் பொருளாதாரம் வலுவாக இருப்பதைக் காட்டுகிறது. இது, உயர் வருமானம் மற்றும் புதுமை சார்ந்த நாடாக மாறும் மலேசியாவின் இலக்கை மேலும் வலுப்படுத்துகிறது.






