ad

கம்போங் ஜாவா WCE நெடுஞ்சாலை திட்ட விவகாரம் — அடுத்த வாரம் இறுதி தீர்மானம்

2 நவம்பர் 2025, 7:13 AM
கம்போங் ஜாவா WCE நெடுஞ்சாலை திட்ட விவகாரம் — அடுத்த வாரம் இறுதி தீர்மானம்
கம்போங் ஜாவா WCE நெடுஞ்சாலை திட்ட விவகாரம் — அடுத்த வாரம் இறுதி தீர்மானம்
கம்போங் ஜாவா WCE நெடுஞ்சாலை திட்ட விவகாரம் — அடுத்த வாரம் இறுதி தீர்மானம்

கோலா சிலாங்கூர், நவம்பர் 1 — கிள்ளான் கம்போங் ஜாவா பகுதியில் நடைபெற்று வரும் மேற்கு கடற்கரை அதிவேக நெடுஞ்சாலை (WCE) கட்டுமானம் தொடர்பான பிரச்சினைக்கு,  சிலாங்கூர் மாநில அரசு அடுத்த வாரம் இறுதி முடிவை எடுக்க உள்ளது.

முக்கிய தரப்புகளுடன் திங்கட்கிழமை  நடைபெற உள்ள இறுதி கூட்டத்திற்கு பின்னர் தீர்மானம் அறிவிக்கப்படும் என்று  மாநில முதல்வர் டத்தோ’ ஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

“சில தவறான புரிதல்கள் மற்றும் தொழில்நுட்ப காரணங்களால் பிரச்சினை ஏற்பட்டது. இதை மாநில வீடமைப்பு நிர்வாக சபை உறுப்பினர் டத்தோ போர்ஹான் அமான் ஷா கவனித்து வருகிறார்.
“மக்களிடையே தொடக்கத்திலிருந்தே சில குழப்பங்கள் இருந்தன, ஆனால் இப்போது அவை சரி செய்யப்பட்டு வருகின்றன. மாநில அரசு இதை தீர்க்க உறுதியாக உள்ளது.
மீதமுள்ள 150 மீட்டர் திட்டப் பகுதியை முடிக்க வழி வகுப்போம்,” என்று அவர் தெரிவித்தார்.
அமிருடின் மேலும் கூறியதாவது, மாநில அரசு WCE நிறுவனம் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சகத்துடன் கலந்துரையாடி, ஒரு முழுமையான தீர்வை நோக்கி செல்வதாகவும்  கூறினார்.

முன்னதாக,  நிலம் கையகப்படுத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த  WCE நியமித்த ஒப்பந்ததாரர் கம்போங் ஜாவா மக்களை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று செந்தோசா தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜார்ஜ், எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இரு தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக, போலீசார் இரண்டு புகார்களைப் பதிவு செய்துள்ளனர்.இது குறித்து தண்டனைச் சட்டத்தின் பிரிவு 506 (அச்சுறுத்தல்) மற்றும் பிரிவு 323 (காயம் ஏற்படுத்துதல்) கீழ் விசாரணை நடைபெற்று வருகிறது.

தகவலின்படி, தைப்பிங் முதல் பந்திங் வரை-யிலான WCE திட்டத்தின் மூன்றாம் கட்டம், அதாவது NKVE/ FHR2 இணைப்பு மையத்திலி-ருந்து முக்கிம் கிள்ளான் வரையிலான நிலம் கையகப்படுத்தும் பணிகள் 2015-ஆம் ஆண்டு  தொடங்கப் பட்டன.

மொத்தம் 233 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த அதிவேக நெடுஞ்சாலை தைப்பிங் (பேராக்) முதல் பந்திங் (சிலாங்கூர்) வரை இணைக்கிறது. இதில் 21 இணைப்பு மையங்கள் (interchanges) உள்ளன; அவை SKVE, NKVE, PLUS, NNKSB, Latar போன்ற முக்கிய நெடுஞ்சாலைகளுடன் இணைக்கின்றன.

WCE நிறுவனம், திட்டத்தின் போது கம்போங் ஜாவா மக்களிடம் பலவந்தமாக நடந்து கொண்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை  மறுத்துள்ளது.

அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில்,  நிலம் கையகப்படுத்துதல் சட்டம் 1960 படி மத்திய அரசு ஏற்கனவே சட்டப்படி பெற்ற நிலங்களில் சில உரிமையாளர்கள் வெளியேற மறுத்ததால் குழப்பம் ஏற்பட்டதாக விளக்கியு-ள்ளது.

2023 செப்டம்பர் 30 நிலவரப்படி, மொத்தம் RM9.8 மில்லியன் இழப்பீடு தொகைக்கு சிலாங்கூர் நிலம் மற்றும் சுரங்கத்துறை இயக்குநர் அலுவலகம் மூலம் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.