ஷா ஆலம் நவ 1 ;-2026 சிலாங்கூர் மாநில அரசின் பட்ஜெட் எதிர்வரும் நவம்பர் 14 ஆம் தேதி மாநில சட்டசபையில் தாக்கல் செய்யப் படவுள்ளது. அடுத்தாண்டுக்கான மாநில பட்ஜெட்டில் இந்தியர்களுக்கு குறிப்பாக இந்தியர்களின் கல்விக்கான அதன் ஒதுக்கீடு அதிகரிக்கப்படவுள்ளதாக மாநில மனித வளம், வறுமை ஒழிப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு பாப்பாராய்டு வீரமான் கூறினார்.
நேற்றைய கோத்தா கெமுனிங் சட்டமன்ற தொகுதியின் தீபாவளி பொது உபசரிப்பில் கலந்து கொண்டதுடன் மாண்புமிகு பாப்பா ராய்டு வீரமான் இந்த விவரங்களைத் தெரிவித்தார். இருப்பினும், அதன் தொகை குறித்து அவர் அறிவிக்கவில்லை.
இந்த இனிப்பான செய்தியானது எதிர்வரும் நவம்பர் 14ஆம் தேதி சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அவர்களால் பட்ஜெட் தாக்கலின் போது அறிவிப்பு செய்யப்படும் என்று அவர் சொன்னார்




