ஷா ஆலம்: 2025ஆம் ஆண்டு மலேசியா ஆசியான் தலைமை பொறுப்பு ஏற்று அதன் உச்சிமாநாட்டை சிறப்பாக நடத்தி முடித்துள்ளது.
இந்த மாநாட்டால் உலக அரங்கில் மலேசியாவின் புகழ் விரிவடைந்துள்ள நிலையில் அனைவராலும் பாராட்டப்பட்டுள்ளது என்று கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு பிரகாஷ் சம்புநாதன் கூறினார்.
அதுமட்டுமல்லாமல், அதிபர் டொனால்ட் டிரம்ப் மலேசியாவிற்கு வருகை மேற்கொண்டு மலேசியாவின் பன்முக கலாச்சாரத்தை பார்த்து வியந்ததுடன் நடனம் ஆடியது மலேசியாவின் ஒற்றுமையை மேலோங்க செய்துள்ளது என்று புகழாரம் சூட்டினார்.
முன்னதாக, நேற்றிரவு ஜாலான் மெஸ்ராவில் நடைபெற்ற கோத்தா கெமுனிங் தீபாவளி பொது உபசரிப்பில் மாண்புமிகு பிரகாஷ் சம்புநாதன் உரை நிகழ்த்தியதோடு நிகழ்ச்சியை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.
கோத்தா கெமுனிங் சட்டமன்ற தொகுதியின் தீபாவளி பொது உபசரிப்பில் சுமார் 3 ஆயிரம் பேர் வரை கலந்து சிறப்பித்தனர்.
.




