ஷா ஆலம்: கோத்தா கெமுனிங் சட்டமன்ற தொகுதியின் தீபாவளி பொது உபசரிப்பு இன்று நவம்பர் 1ஆம் தேதி சனிக்கிழமை ஜாலான் மெஸ்ரா 25/66 எனும் பகுதியில் சிறப்பாக நடந்தேறியது.
கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு பிரகாஷ் சம்புநாதன் தலைமையில் சிறப்பாக நடைப்பெற்ற பொது உபசரிப்பு நிகழ்ச்சியில் மூவின மக்கள் கலந்து சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக அதிஷ்ட குலுக்கல் அங்கமும் இடம்பெற்று பொதுமக்கள் பரிசுகளை வெற்றிக்கொண்டனர்.
இந்த தீபாவளி பொது உபசரிப்பில் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பாப்பாராய்டு வீரமான், ஜமாலியா ஜமாலுடின், ஷா ஆலம் மாவட்ட காவல் துறையின் தலைவர், MBSJ நகர் மன்ற உறுப்பினர்கள், KKI இந்திய தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.






