ஷா ஆலாம், நவம்பர் 1 — சிலாங்கூர் மாநிலத்தின் Bantuan Kehidupan Sejahtera Selangor (Bingkas) பிங்காஸ் நிதி உதவித் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் இன்று முதல் மீண்டும் திறக்கப் பட்டுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது.
இந்த Bingkas திட்டம், தகுதி பெற்ற குடும்பங்கள் மாதம் RM300 அளவில் 24 மாதங்களுக்கு நிதி உதவியை பெறும். இது உணவு, மருந்து, கல்வி உபகரணங்கள் போன்ற அத்தியாவசிய தேவைகளை பெற உதவியாகும்.

இந்த திட்டம், 2022 ஆம் ஆண்டு அறிமுகப் படுத்தப்பட்ட Iltizam Selangor Penyayang நேசிப்பான சிலாங்கூரின் முன் முயற்சியின் கீழ் உள்ள 46 திட்டங்களில் ஒன்றாகும், மேலும் இது முன்னதாக இருந்த Kasih Ibu Smart Selangor (KISS) மற்றும் KISS IT (ஒற்றைத் தாய்மார்கள்) திட்டங்களுக்கு மாற்றாகும்.
பண உதவிகள் SELangkah e-wallet மூலமாக வழங்கப்படும், இதனால் பெறுநர்களுக்கு பரிவர்த்தனைகள் எளிதாக இருக்கும்.





