ad

அமேரிக்கா–மலேசியா வர்த்தக ஒப்பந்தம் குறித்து எழுந்த குற்றச்சாட்டுகள் அரசியல் நோக்கமுடையது — அன்வார்

1 நவம்பர் 2025, 4:04 AM
அமேரிக்கா–மலேசியா வர்த்தக ஒப்பந்தம் குறித்து எழுந்த குற்றச்சாட்டுகள் அரசியல் நோக்கமுடையது — அன்வார்
அமேரிக்கா–மலேசியா வர்த்தக ஒப்பந்தம் குறித்து எழுந்த குற்றச்சாட்டுகள் அரசியல் நோக்கமுடையது — அன்வார்
அமேரிக்கா–மலேசியா வர்த்தக ஒப்பந்தம் குறித்து எழுந்த குற்றச்சாட்டுகள் அரசியல் நோக்கமுடையது — அன்வார்
அமேரிக்கா–மலேசியா வர்த்தக ஒப்பந்தம் குறித்து எழுந்த குற்றச்சாட்டுகள் அரசியல் நோக்கமுடையது — அன்வார்

கியோங்ஜூ (தென் கொரியா), நவம்பர் 1 —மலேசியா மற்றும் அமேரிக்கா இடையிலான பரஸ்பர வர்த்தக ஒப்பந்தம் (ART) நாட்டுக்கு தீங்கு விளைவிக்கும் என சில தரப்புகள் கூறிய குற்றச்சாட்டுகளை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம்  “அரசியல் நோக்கத்துடன் கூறப்பட்டவை” என இன்று நிராகரித்தார்.

அதே நேரத்தில் நிதி அமைச்சராகவும் இருக்கும் அன்வார், பெரிய அளவிலான உறவுகள் மற்றும் முதலீடுகள் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் சில அளவு சமரசம் அவசியம் என்றாலும்,  மலேசியாவின் நலன்களும் இறையாண்மையும் எப்போதும் முன்னுரிமையாகவே இருக்கும் என்று வலியுறுத்தினார்.

அவர் குறிப்பிட்டதாவது, முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சர்  தெங்கு ஜஃப்ருல் அஜீஸ்  ஏற்கனவே ART ஒப்பந்தம் குறித்து பாராளுமன்றத்தில் விரிவாகவும் தெளிவாகவும் விளக்கம் வழங்கியுள்ளார்.

“ஒப்பந்தத்தில் உள்ள ஒரு அல்லது இரண்டு சொற்கள் குறித்து சில தரப்புகள் வாதிக்க விரும்பினால், அதற்கு  மேலதிக விளக்கம் தேவையில்லை  என எனக்கு தோன்றுகிறது, ஏனெனில்  தெங்கு ஜஃப்ருல் அஜீஸ்  இதை  நாடாளுமன்றத்தில் பலமுறை விளக்கி விட்டார்.

அவர்கள் இதை தொடர்ந்து தாக்குதலுக்கு பயன்படுத்த விரும்பினால், அது அரசியல் நோக்கத்துடன் தான்,” என்று அவர்  ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC)  தலைவர்களின் கூட்டத்தின் முதல் நாள் நிறைவில் பத்திரிகையாளர்களிடம்  பிரதமர்  கூறினார்.

அன்வார், ART ஒப்பந்தம் மலேசியாவின் பொருளாதார தன்னாட்சி மற்றும் நீண்டகால நலன்களை பாதிக்கும் என்ற குற்றச்சாட்டு-களுக்கு பதிலளித்தார்.

“இது உலகில் ஒரே ஒப்பந்தம் அல்ல. ஒவ்வொரு நாடும் ஒப்பந்தங்களில் கையெழுத்திடுகிறது. அதில் நாம் மொத்தப் பொருளையும், அதன் விளைவுகளையும், எவ்வளவு இடைவெளி இருக்கிறது அதன் மொத்த சாதக மற்றும் பாதகங்களை ஆழமாக பார்க்க வேண்டும்.

இது பொறுப்பை தவிர்க்க அல்ல, ஆனால் நெகிழ்வான அணுகுமுறையை தேடுவதற்காக. எல்லா ஒப்பந்தங்களும் இப்படித்தான் இருக்கும்,” என்று அவர் கூறினார்.

அமேரிக்காவுடன் நல்ல உறவைப் பராமரிப்பதன் முக்கியத்துவத்தை மறுக்க முடியாது என்றும் அவர் வலியுறுத்தினார். “நாம் (அமேரிக்க அதிபர்) டொனால்ட் டிரம்ப் மற்றும் சீன பிரதமர் லி கியாங் ஆகியோருடன் அரிய உலோகங்கள் மற்றும் செமிகொண்டக்டர் துறைகள் பற்றிய விவரமான கலந்துரையாடல்களை நடத்தி வருகிறோம். எனவே, நாங்கள் அமேரிக்காவிடம் சரணடைந்தோம் என்று கூறுவது பொய்,” என்றார்.

அன்வார் மீண்டும் வலியுறுத்தியது, ART ஒப்பந்தம் நாட்டின் நலன்களையும் சட்டங்களையும் கருத்தில் கொண்டு கையெழுத்திடப்பட்டது.“அதைச் செய்ய நமக்கு பொறுமையும் ஞானமும் தேவை — கோபமும் தொடர்ச்சியான குற்றச்சாட்டுகளும் அல்ல.

நாம் காசா பிரச்சனையில் எங்கள் நிலைப் பாட்டை சமரசம் செய்தோமா? இல்லை. 
நான் டிரம்பிடம் எல்லாவற்றையும் ஏற்கச் சொன்னேனா? இல்லை. 
நாங்கள் முதல் கட்ட அமைதித் திட்டத்தை ஆதரிக்கிறோம்,
மேலும் முழுமையான தீர்வை விரும்புகிறோம்,” என்று அவர் கூறினார்.
உலகளாவிய தளத்தில் அமேரிக்கா மற்றும் சீனாவுக்கிடையிலான பதற்றங்கள், பிரேசில் மற்றும் தென் ஆப்பிரிக்காவுடனான ஒத்துழைப்புகள் போன்ற சவால்களில் மலேசியாவின் கொள்கை குறித்து பேசும்போது, அன்வார் இவ்வாறு கூறினார்.

“அமெரிக்கா மற்றும் சீனாவுக்குமிடையிலான இவ்வளவு நெருக்கடியான சூழலில் எப்படிச் சமநிலையை பேணுவது? பிரேசில் மற்றும் தென் ஆப்பிரிக்காவை டொனால்ட் டிரம்ப் மற்றும் அமெரிக்காவுடன் ஒரே மேடையில் சேர்ப்பதற்கான தைரியம் எப்படிச் சாத்தியம்? நாம் நீண்டகால, தொலைநோக்குடன் எங்கள் தேசிய நலன்களை அடிப்படையாகக் கொண்டு முடிவு செய்கிறோம்,” என்றார்.
அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.