கோலாலம்பூர்: ஸ்ரீ கெம்பாங்கனில் கைகள் கட்டப்பட்ட நிலையில், ஆடையின்றி சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட உள்ளூர் பெண்ணின் கொலை தொடர்பாக மூன்று உள்ளூர் ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் பாதிக்கப் பட்டவரின் முன்னாள் காதலனும் வளர்ப்பு அண்ணனும் அடங்குவர்.24 முதல் 30 வயதுக்குட்பட்ட இந்த மூன்று பேரும் விசாரணைக்காக காவலில் வைக்கப் பட்டுள்ளனர்,மேலும் அவர்களை காவல் நீட்டிப்பு காக இன்று (வெள்ளிக்கிழமை) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல் துறை திட்டமிட்டுள்ளது.
சடலம் கண்டு எடுக்கப்படுவதற்கு நான்கு நாட்களுக்கு முன்னர், அக்டோபர் 25 அன்று, அப்பெண் காணாமல் போனதாக அவரது குடும்பத்தினர் புகார் அளித்திருந்தனர். இச்சம்பவம் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302 (கொலை) கீழ் விசாரிக்கப்படுகிறது




