ஷா ஆலம், அக் 31 : இவ்வாண்டிற்கான எம்பிஎஸ்ஜே பாரம்பரிய விழா நவம்பர் 22 மற்றும் 23 அன்று சுபாங் பரேட்டில் நடைபெறும்.
இந்த விழாவில் மொத்தம் RM18,000 மதிப்புள்ளபரிசுகள் கொண்ட பல போட்டிகள் நடைபெறும். அதில் நாசி அம்பெங் நடன போட்டி, பள்ளிகளுக்கான கோயர் மற்றும் மலேசிய இசை பாடல் போட்டி, கோம்பாங் போட்டி மற்றும் மாணவர்க- ளுக்கான கதை கூறும் போட்டி போன்ற பல நிகழ்வுகள் இடம்பெறும்.
இந்த விழா இரண்டாவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது மலேசியாவில், குறிப்பாக சிலாங்கூரில் உள்ள பல்வேறு இனங்களின் கலை மற்றும் பாரம்பரியத்தை மேம்படுத்தவும் பாதுகாப்பதற்கும் மாநகராட்சியின் தொடர்ச்சியான முயற்சியாகும்.
மேலும், இந்நிகழ்வு இளம் தலைமுறையின் திறமைகளை வளர்ப்பதற்கும், உள்ளூர் வியாபாரிகள் மற்றும் உணவுப் பாரம்பரியத்தை ஊக்குவிப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அனைத்து சமூகத்தினரையும், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளையும் இந்த விழாவில் கலந்துகொள்ள சுபாங் ஜெயா மாநகராட்சி அழைக்கிறது.




