கோலாலம்பூர், அக் 31 – மலேசியாவின் ஆண்கள் இரட்டையர் பூப்பந்து வீரர்கள் ஆரோன் சியா-சோ வூய் யிக் ஜெர்மனியில் நடைபெறும் ஹைலோ ஓப்பன் 2025 போட்டியின் காலிறுதிக்குள் முன்னேறினர்.
அவர்கள் செக் குடியரசின் ஜிரி கிரால்–ஆன்ட்ரே கார்ல் ஜோடியை 38 நிமிடங்களில் 21–9, 22–20 என வீழ்த்தினர்.
இந்த போட்டியின் முதலிடம் வகிக்கும் மலேசிய ஜோடி, அடுத்த சுற்றில் இந்தோனேசியாவின் சபர் கார்யமன் குதமா-மோஹ் ரெசா பஹ்லேவி இணையை எதிர்கொள்ளவுள்ளனர். அந்த ஜோடி பிரான்சின் கிறிஸ்டோ போபோவ்–டோமா ஜூனியர் போபோவ் சகோதரர்களை 21–12, 21–15 என்ற கணக்கில் தோற்கடித்தனர்.
இதற்கிடையில், மலேசிய பெண்கள் ஒற்றையர் பிரிவில் விளையாடிய கே. லெட்சனா மற்றும் எஸ். கிசோனாவின் பயணம் இரண்டாம் சுற்றிலேயே முடிந்தது.
லெட்சனா டென்மார்க்கின் மியா ப்ளிச்ஃபெல்டிடம் 11–21, 13–21 எனவும், கிசோனா இந்தோனேசியாவின் புத்ரி குசுமா வர்தானியிடம் 11–21, 13–21 எனவும் தோல்வியடைந்தனர்.




