சபாக் பெர்ணம்5, அக் 30 — பான் கானல் (Ban Canal)’25 கார்னிவல் நவம்பர் 7 முதல் 9 வரை சபாக் பெர்ணம் மாவட்டத்தின் பாரிட் 14, சிம்பாங் லீமா பகுதியில் மீண்டும் வண்ணமயமாக நடைபெற உள்ளது.
சிலாங்கூர் மந்திரி புசார் அல்லது எம்.பி ஐ ஏற்பாடு செய்துள்ள இந்நிகழ்ச்சி, பார்வையாளர்களுக்கு நீர்விளையாட்டுகள், கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் இயற்கை அழகை மையப்படுத்திய பொழுதுபோக்கு செயல்பாடுகள் மூலம் ஒரு தனித்துவமான அனுபவத்தை வழங்கவுள்ளது.
2022 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த முயற்சி, 2025 சிலாங்கூர் சுற்றுலா ஆண்டை சிறப்பாகக் கொண்டாடுவதோடு, மாநிலத்தின் வடபகுதியில் உள்ள கிராம மற்றும் வேளாண்மை சார்ந்த சுற்றுலா வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. மேலும் மக்களின் கவனத்தை ஈர்க்கவிருக்கும் முக்கிய நிகழ்ச்சிகளில், படகு பந்தயம், நெற்பயிர் வயல் ஓட்டம், கயிறு இழுக்கும் போட்டி மற்றும் பல இனத்தவரின் தவில் விழா ஆகியவை இடம்பெறுகின்றன. இவை அனைத்தும் பல்வேறு சமூகங்களின் ஒற்றுமை பிரதிபலிக்கின்றன.
அனைவரும் பான் கானல் ’25 கார்னிவலுக்கு வருகை தந்து, மரபு, இயற்கை மற்றும் வாழ்க்கை முறை ஆகியவற்றை மாநில முன்னேற்றத்துடன் மக்கள் இந்நிகழ்ச்சியை சிறப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.




