ad

கிழக்கு ஜாவாவின் செமேரு எரிமலை 6 மணி நேரத்தில் 8 முறை வெடித்தது

30 அக்டோபர் 2025, 11:27 AM
கிழக்கு ஜாவாவின் செமேரு எரிமலை 6 மணி நேரத்தில் 8 முறை வெடித்தது

ஜாவா, அக் 30- கிழக்கு ஜாவாவில் உள்ள செமேரு மலை எரிமலை இன்று அதிகாலை ஆறு மணி நேரத்தில் எட்டு முறை வெடித்ததாக ANTARANEWS செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த வெடிப்புகளின் போது ஏற்பட்ட அடர்த்தியான புகை மற்றும் சாம்பல், எரிமலையின் உச்சியில் இருந்து 400 மீட்டர் முதல் 800 மீட்டர் உயரம் வரை எட்டியது.

முதல் வெடிப்பு நள்ளிரவு 12.09 மணிக்கு (WIB) நிகழ்ந்தது. அதைத் தொடர்ந்து குறுகிய கால இடைவெளியில் பல வெடிப்புகள் ஏற்பட்டன, கடைசியாகக் காலை 6.02 மணிக்குச் சாம்பலின் உயரம் சுமார் 700 மீட்டர் அளவில் பதிவாகியுள்ளது.

எரிமலை மற்றும் புவியியல் இடர் குறைப்பு மையத்தின் (PVMBG) மதிப்பீட்டின் அடிப்படையில், செமேரு மலையின் நிலை தொடர்ந்து 'கவனம்' (Waspada, Level II) என்ற மட்டத்தில் நீடிக்கிறது.

தென் கிழக்குத் திசையில், குறிப்பாக பெசுக் கோபோகன் (Besuk Kobokan) ஆற்றங்கரையில் உச்சியில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவுக்குள் எந்தவொரு நடவடிக்கையிலும் ஈடுபட வேண்டாம் என்று அதிகாரிகள் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், உச்சி மலையில் இருந்து 13 கிலோமீட்டர் தொலைவு வரை செல்லக்கூடிய வெப்ப மேகங்கள் மற்றும் லாவா பாய்ச்சலுக்கு ஆளாக நேரிடும் என்பதால், அந்த ஆரம் எல்லைக்கு வெளியே உள்ள நதிக்கரைகளில் 500 மீட்டர் தொலைவுக்குள் மக்கள் நெருங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.