கோலாலம்பூர் அக் 30: 2026 மலேசியாவிற்கு வருகை தரும் ஆண்டை முன்னிட்டு சுமார் 46 மில்லியன் அனைத்துலக பயணிகளை வரவேற்க கோலாலம்பூர் மாநகர் மன்றம் தயாராகவுள்ளது.
இந்த தகவலை கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் டத்தோ பண்டார் டத்தோஶ்ரீ மைமுனா மொகமட் ஷெரிஃப் தெரிவித்தார்.
அடுத்த ஆண்டு நாடு முழுவதும் வருகை தரும் பயணிகளின் மொத்த எண்ணிக்கையான 46 மில்லியனை வரவேற்கும் நோக்கில், உள்கட்டமைப்பு, தூய்மை, நகரத்தின் விளக்குகள் மற்றும் உள்ளூர் சமூகத்தின் பங்களிப்பு உள்ளிட்ட அம்சங்களில் ஆரம்பக்கட்ட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
இதற்கிடையில், அடுத்த ஆண்டு முழுவதும் நடத்தப்படவுள்ள தொடர்ச்சியான நிகழ்வுத் திட்டங்களை நாளை (அக்டோபர் 31) அறிவிக்கவுள்ளதாக மைமுனா தெரிவித்தார்.




