ஷா ஆலாம், அக் 30- பெட்டாலிங் ஜெயா நகராண்மை கழகமான MBPJ அரங்கத்தில் நேற்றிரவு நடைபெற்ற எஃப்.ஏ. கிண்ணத்தின் காலிறுதிக்கு பிந்தைய இரண்டாம் சுற்று ஆட்டத்தைத் தொடர்ந்து, சிலாங்கூர் எஃப்.சி. மற்றும் நெகிரி செம்பிலான் எஃப்.சி. ரசிகர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தை மலேசியக் காற்பந்து சங்கமான எஃப் ஏ எம் கடுமையான கண்டிக்கிறது.
இந்த தகவலை மலேசிய காற்பந்து சங்கத்தின் பொறுப்புத் தலைவர் டத்தோ முகம்மது யூசோஃப் மஹாடி மூலம் தீவிரமாகக் கவனித்து வருகிறது.
இந்தச் சம்பவம் முழுவதுமாக மலேசியக் கால்பந்து லீக்கின் (MFL) நிர்வாகத்தின் கீழ் நடந்ததால், இந்தச் சம்பவம் குறித்த முழுமையான அறிக்கை MFLயிடம் ஒப்படைக்கப்படும் என்றும், அதன் அடுத்த கட்ட நடவடிக்கை மற்றும் முடிவு MFLஇன் பொறுப்பாகும் என்றும் முகம்மது யூசோஃப் மஹாடி விளக்கினார்.
இருப்பினும், இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க FAM தொடர்ந்து நிலைமையைக் கண்காணிக்கும் என்று அவர் வலியுறுத்தினார்.
அனைத்து ரசிகர்களும் தங்கள் அணிகளுக்கு ஆதரவு அளிக்கும்போது விளையாட்டு மனப்பான்மை, ஒழுக்கம் மற்றும் வெளிப்படைத்தன்மைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும், கால்பந்து ஒற்றுமைப்படுத்த வேண்டுமே தவிர, பிரித்தாளக் கூடாது என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.




