கோலாலம்பூர், அக் 30 — அடுத்த ஆண்டு முதல் ஒவ்வொரு மாநிலத்திலும் ஆட்டிஸம் குழந்தைகளுக்காக சிறப்பு மையங்கள் (Tabika KEMAS Autism) கட்டப்படும் என துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அக்மட் சாஹிட் ஹமிடி தெரிவித்தார்.
இந்த திட்டம் ஆட்டிஸம் குழந்தைகளுக்கு மலிவான ஆரம்பக் கல்வியை வழங்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுகிறது. KEMAS கல்வி அமைப்பின் வளங்களையும் திறனையும் பயன்படுத்தி இந்த சிறப்பு கல்வி வழங்கப்படும்.
“பல பெற்றோர் தங்களது ஆட்டிஸம் குழந்தைகளை அதிக கட்டணமுள்ள மையங்களில் அனுப்ப வேண்டியிருப்பதால், இது அவர்களுக்கு நிதி சுமையை ஏற்படுத்துகிறது. அடுத்த ஆண்டு, ஒவ்வொரு மாநிலத்திலும் ஆட்டிஸம் குழந்தைகளுக்காக சிறப்பு மையங்கள் கட்டப்படும், வழங்கப்பட்ட நிதி போதுமானால், 2027க்கு முன்னர் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது ஒரு மையம் இருக்கும்,” என்று நகர மற்றும் ஊரகப் பகுதியின் வளர்ச்சி அமைச்சராகவும் இருக்கும் அக்மட் சாஹிட் ஹமிடி கூறினார்.
இந்த அறிவிப்பை அவர் 2026 பட்ஜெட் விவாதத்தின் போது மக்களவையில் வெளியிட்டார்.
மேலும், பாடத்திட்டங்கள் UPSI உடன் ஒத்திசைக்கப்பட்டு, முழுமையான சிறப்பு கல்வி வழங்கப்படுவதை உறுதி செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றார்.




