ஷா ஆலம், அக் 30 — சிலாங்கூரில் ஜுவாலான் எஹ்சான் ரஹ்மா திட்டத்தை வெற்றிகரமாக நடத்துவதற்காக மாநில அரசு அதிக அளவில் நிதி ஒதுக்கியுள்ளது.
இந்த திட்டம் 2022ஆம் ஆண்டு RM12 மில்லியன் செலவில் தொடங்கியது. பின்னர் 2023இல் RM13 மில்லியனுக்கு உயர்ந்தது, 2024இல் RM16.4 மில்லியனாக விரிவடைந்தது.
இந்த ஆண்டு, உள்நாட்டுப் வர்த்தக அமைச்சகம் (KPDN) உடன் இணைந்து நடத்தப்படும் ஜுவாலான் எஹ்சான் ரஹ்மா திட்டத்திற்கு மாநில அரசு RM17 மில்லியன் செலவிட்டுள்ளது. இந்த திட்டத்தின் நோக்கம் குறைந்த வருமானம் கொண்ட மக்களுக்கு நேரடி உதவியை வழங்குவதாகும்.
இந்த நிதி ஒதுக்கீட்டின் அதிகரிப்பு, மக்களுக்கு அனைத்து தேவைகளிலும் உதவி செய்ய அரசு உறுதியாக இருப்பதை காட்டுகிறது என ``PKPS Ehsan Marketing Sdn Bhd`` இயக்குநர் ரொஸ்னானி அப்துல் மலேக் கூறினார்.
“மக்கள் இந்த திட்டத்தை அதிகம் விரும்புகின்றனர், ஏனெனில் 50% வரை பணத்தை சேமித்து தரமான பொருட்களை பெற முடிகிறது,” என்று ரொஸ்னானி தெரிவித்தார்.
இந்த திட்டத்தின் பயன்கள் அதிகமாக இருப்பினும், செலவு கூடுதலாக இருப்பதனால், இதை தொடர்ந்து நடத்த சிலாங்கூர் அரசு உணவு கிடங்கு (GMS)” கட்டும் முயற்சியை மேற்கொண்டு வருகிறது என்றார்.




