ad

இவ்வாண்டிற்கான மலேசியா ஸ்மார்ட் சிட்டி நிலை 2 விருதை எம்.பி எஸ்.ஏ.பெற்றது

30 அக்டோபர் 2025, 8:31 AM
இவ்வாண்டிற்கான மலேசியா ஸ்மார்ட் சிட்டி  நிலை 2 விருதை எம்.பி எஸ்.ஏ.பெற்றது
இவ்வாண்டிற்கான மலேசியா ஸ்மார்ட் சிட்டி  நிலை 2 விருதை எம்.பி எஸ்.ஏ.பெற்றது

ஷா ஆலம், அக் 30: ஷா ஆலம் மாநகராட்சி (எம்.பி எஸ்.ஏ.) மலேசியாவின் முன்னணி உள்ளூராட்சி அமைப்புகளில் ஒன்றாக தனது நிலையை மேலும் வலுப்படுத்தியுள்ளது. இது 2025ஆம் ஆண்டுக்கான மலேசியா ஸ்மார்ட் சிட்டி நிலை 2 (Developing Smart City) விருதை பெற்றதன் மூலம் நிரூபிக்கப்பட்டது.

இவ்விருது, துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஃபடில்லா யூசோஃப் அவர்களால் ஷா ஆலம் மேயர் டத்தோ முகமட் ஃபௌசி முகமட் யாதிம் அவர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த உயரிய அங்கீகாரம், மலேசியா தரநிலை அடிப்படையில் உள்ள 35 ஸ்மார்ட் சிட்டி குறியீடுகளின் அடிப்படையில் வழங்கப்பட்டது. இது ஸ்மார்ட் சிட்டி முயற்சிகள் எவ்வளவு திறம்பட அமல்படுத்தப்பட்டுள்ளன என்பதை மதிப்பீடு செய்கிறது.

இந்த அங்கீகாரம், டிஜிட்டல் மாற்றமும் தொழில்நுட்ப அடிப்படையிலான நிர்வாகத்தையும் தொடர்ந்து முன்னேற்ற எங்கள் உறுதியை பிரதிபலிக்கிறது எனவும் இதன் நோக்கம் ஷா ஆலம் மக்களின் நலனுக்காகவும் என எம்.பி எஸ்.ஏ. தெரிவித்தது.

மேலும் இந்த விருது, எங்கள் சேவைகளின் தரத்தை உயர்த்தவும், வழங்கல் முறையின் திறனை மேம்படுத்தவும், நிலையான வளர்ச்சியை ஆதரிக்கும் ஸ்மார்ட் கட்டமைப்பை விரிவுபடுத்தவும் எம்.பி எஸ்.ஏ. மேற்கொண்ட தொடர் முயற்சிகளை நிரூபிக்கிறது என தெரிவித்தது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.