ஷா ஆலம், அக் 30: தற்போது நான்கு மலேசியர்கள் இன்டர்போல் (Interpol) வெளியிட்ட சிவப்பு நோட்டீஸ் (Red Notice) பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
இவர்கள் கொலை, மோசடி மற்றும் கள்ளப்பணம் போன்ற குற்றச்சாட்டுகளுக்காக தேடப்படுகின்றனர்.
இதில் முன்னாள் மலேசியக் கவல்துறை சிறப்பு நடவடிக்கை பிரிவு (UTK) உறுப்பினர் சிருல் அஸார் உமாரும் அடங்குவார். அவர் மங்கோலிய மாடல் ஆல்தாந்தூயா ஷாரீபூவின் கொலை சம்பவத்துடன் தொடர்புடையவர் என கருதி தேடப்படுவதாக Interpol அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், கியூ கோ இங் என்ற காப்பீட்டு முகவர் மூன்று காப்பீட்டு மோசடியில் ஈடுப்பட்டு RM10,000 நஷ்டத்தை ஏற்படுத்திய குற்றத்திற்காக தேடப்படுகிறார்.
மேலும், லூ சூன் ஐக் (44) கொலைக்காக மற்றும் தன் லோக் செங் (57) பினாங்கில் உள்ள தவறான சொத்துகள் சம்பந்தப்பட்ட வழக்கில் தொடர்பு கொண்டுள்ளதால் தேடப்படுகிறார்கள்
இந்த நபர்களின் பெயர்கள் மற்றும் விவரங்கள் ``Interpol`` இணையதளத்தில் ``Red Notice`` இருக்கும். இதன் மூலம் சர்வதேச சட்ட அமலாக்க அமைப்புகள் குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்து, சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்.




