ஷா ஆலம், அக் 30: ஷா ஆலம் மாநகராட்சி (எம்பிஎஸ்ஏ) தனது பகுதிகளில் குறிப்பாக கம்போங் ஜாலான் கெபூன் போன்ற பாரம்பரிய கிராமங்களில் சட்டவிரோதமாகக் குப்பை கொட்டும் நடவடிக்கையை தடுப்பதற்கான முயற்சிகளை தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது.
கடந்த ஆண்டு முதல் ‘பின் பாயிண்ட்’ முறை மாற்றப்பட்டு, வாரத்தில் மூன்று முறை வீடுதோறும் குப்பை சேகரிப்பு நடைமுறையில் அமல்படுத்தப்பட்டது என எம்பிஎஸ்ஏ பொது சுத்தம் மற்றும் கழிவு மேலாண்மை துறையின் துணை இயக்குநர் ஹஸ்லினா அப்துட் அசீஸ் தெரிவித்தார்.
“இந்த முறையால் பொதுக் இடங்களில் குப்பை தேங்குவதைத் தடுக்க முடிந்தது ,” என்று அவர் கூறினார்.
மேலும், ஒவ்வொரு வீட்டிலும் குப்பைத்தொட்டிகள் இருப்பதை உறுதி செய்ய, எம்பிஎஸ்ஏ நிறுவனம் KDEB கழிவு மேலாண்மையுடன் இணைந்து செயல்படுகிறது.
சில குடியிருப்பாளர்கள் மற்றும் வியாபாரிகள் தடை செய்யப்பட்ட இடங்களில் இன்னும் குப்பை கொட்டுவது வருத்தத்திற்குரியது என கம்போங் ஜாலான் கெபூன் கிராமத் தலைவர் அக்மட் முஹிடின் டசூகி தெரிவித்தார்.
இப்பிரச்சனையை களைய கிராமக்குழு (JPKK) கண்காணிப்பை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், மக்கள் அனைவரும் சுத்தத்தைக் காக்கச் சேர்ந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.




