ad

மாமன்னர் 47வது ஆசியான் உச்சநிலை மாநாட்டு முடிவுகள் குறித்து பிரதமரிடம் விளக்கம் பெற்றார்

30 அக்டோபர் 2025, 6:03 AM
மாமன்னர் 47வது ஆசியான் உச்சநிலை மாநாட்டு முடிவுகள் குறித்து பிரதமரிடம் விளக்கம் பெற்றார்

கோலாலம்பூர், அக் 30 — மாட்சிமை தங்கிய பேரரசர் சுல்தான் இப்ராஹிம், இன்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமை கோலாலம்பூரில் உள்ள இஸ்தானா புக்கிட் துங்குவில் சந்தித்தார்.

பேரரசர் சுல்தான் இப்ராஹிம் அவர்களின் முகநூல் பதிவின்படி, அந்த சந்திப்பு கடந்த வாரம் நாட்டின் தலைநகரில் நடைபெற்ற 47வது ஆசியான் உச்சநிலை மாநாடு மற்றும் அதனுடன் தொடர்புடைய உச்சநிலை மாநாடுகளின் முடிவுகள் குறித்து பிரதமர் அரசருக்கு விளக்கம் அளித்தார்.

நேற்று பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையின்படி, அக்டோபர் 26 முதல் 28 வரை நடைபெற்ற அந்த மாநாட்டின் போது மொத்தம் 80 முடிவு ஆவணங்கள் பெறப்பட்டு அங்கீகரிக்கப்பட்டன. அவை அமெரிக்கா, ஜப்பான், இந்தியா, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களுடன் ஆசியான் தலைவர்கள் இணைந்து வெளியிட்ட கூட்டு அறிக்கைகளையும் உள்ளடக்கியது.

அத்துடன், ஆசியான் +3 உச்சநிலை மாநாடு, கிழக்கு ஆசியா உச்சநிலை மாநாடு (EAS), ஆசியா சுழற்சி இல்லா வெளியேற்ற சமூக (AZEC) தலைவர்கள் கூட்டம் மற்றும் பிராந்திய விரிவான பொருளாதார கூட்டுறவு (RCEP) உச்சநிலை மாநாட்டின் முடிவுகளும் இதில் அடங்கும்.

மற்றொரு முக்கிய சாதனையாக, தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இந்நிகழ்வை பிரதமர் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர்முன்னிலையில் நடைபெற்றது.

இத்துடன், மலேசியா தனது ஆசியான் தலைமைப் பொறுப்பை பிலிப்பைன்ஸ்க்கு அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்து, 2025 ஆசியான் தலைமைக்காலத்தின் இறுதி கட்டத்திற்குள் நுழைந்துள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.