ஷா ஆலம், அக் 30: நேற்று மாலை தாமான் பெர்டானா ஹைட்ஸ், ஜாலான் பூலாவ் அங்ஸா U10/2 பகுதியில் உள்ள ஆறு ஏக்கர் பரப்பளவு கொண்ட காடு தீப்பற்றியது.
இசம்பவம் குறித்த தனது தரப்புக்கு மாலை 4.15 மணிக்கு அவசர அழைப்பு வந்ததாக சிலாங்கூர் மாநில மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்பு துறை (JBPM) செயல்பாட்டு பிரிவு உதவி இயக்குநர் அக்மட் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.
பின், மாலை 4.27 மணிக்கு தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்தை அடைந்தனர். பின், தீ மாலை 6.05 மணிக்குள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது என அக்மட் முக்லிஸ் கூறினார்.
தீயை அணைக்கும் நடவடிக்கையை புக்கிட் ஜெலுதோங் தீயணைப்பு நிலையம் (BBP) தலைமையில் காப்பார் மற்றும் சுங்கை பூலோ தீயணைப்பு நிலையங்கள் உதவின என அவர் தெரிவித்தார்.




