ad

பூச்சோங் பகுதியில் உரிமம் இல்லாத 58 தொழிற்சாலைகளுக்கு எதிராக நடவடிக்கை

30 அக்டோபர் 2025, 3:18 AM
பூச்சோங் பகுதியில் உரிமம் இல்லாத 58 தொழிற்சாலைகளுக்கு எதிராக நடவடிக்கை

ஷா ஆலம், அக். 30 – பூச்சோங் பகுதியில் உள்ள மெராந்தி உத்தமா தொழில்துறை பூங்காவில் வணிக உரிமம் இல்லாமல் இயங்கி வரும் 58 தொழிற்சாலைகளுக்கு எதிராக சிப்பாங் மாநகராட்சி (MPSepang) நடவடிக்கை எடுக்க இருப்பதாக தெரிவித்துள்ளது.

அந்தத் தொழிற்சாலைகளுக்கு உரிமம் பெறுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த அவகாசம் தற்போது முடிவடைந்துவிட்டதாக சிப்பாங் மாநகராட்சி துணைத் தலைவர் முகமது ஷா ஒஸ்மின் தெரிவித்ததாக தி ஸ்டார் தெரிவித்துள்ளது.

இனி அவை கட்டாயம் உரிமம் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தும் நோட்டீஸ்களை வழங்க உள்ளோம். உரிமம் வழங்குவது மாநகராட்சிக்கு வருவாய் ஈட்டுவதற்காக மட்டுமல்ல, அதேசமயம் தொழிற்சாலைகளின் செயல்பாட்டை ஒழுங்குபடுத்துவதற்கும் முக்கியமானது என்று அவர் கூறினார்.

மேலும் அனைத்து தொழிற்சாலைகளும் தீயணைப்பு மற்றும் மீட்பு துறை, சுற்றுச்சூழல் துறை, பயன்பாட்டு சேவை நிறுவனங்கள் போன்ற சம்பந்தப்பட்ட முகமைகளின் விதிமுறைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்று அவர் வழியுருத்தினார். இதற்கிடையில், சிப்பாங் மாநகராட்சி ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரை வாகனம் இழுத்துச் செல்லும் நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தியுள்ளது.

போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்த அல்லது பாதுகாப்புக்கு ஆபத்தாக இருந்த வாகனங்களுக்கு எதிராக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார். அந்தக் காலப்பகுதியில் மொத்தம் 1,990 வாகனங்கள் இழுத்துச் செல்லப்பட்டன. அதில் 1,797 சைபர்ஜெயாவில், 147 பண்டார் பாரு சாலாக் திங்கியில், மற்றும் 46 டெங்கிலில் நடந்தன.

இந்த நடவடிக்கைகளில் மாநகராட்சி RM437,800 வாகனம் இழுத்துச் சென்றதில், RM159,200 அபராதத்தில் என மொத்தம் RM597,000 வசூலித்துள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.