தென் கொரியா, அக் 30 - நாளை தொடங்கவுள்ள பொருளாதாரத் தலைவர்களுக்கான ஆசிய பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பு APEC கூட்டத்தின் மலேசிய பேராளர்கள் குழுவை வழிநடத்த பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், தென் கொரியாவின் கியோங்ஜுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
"மற்றவர்களுடன், விநியோகச் சங்கலிகளை வலுப்படுத்துதல், இலக்கவியல் பொருளாதாரத்தை மேம்படுத்துதல் மற்றும் நிலையான வளர்ச்சிக்கான வட்டார ஒத்துழைப்பில் உட்படுத்தப்பட்ட முக்கியத்துவத்தை பிரதமர் தமது அறிக்கையில் வலியுறுத்துவார்." என தென் கொரியாவுக்கான மலேசிய தூதர் டத்தோ முகமட் சம்ரூனி காலிட் தெரிவித்தார்.
தென் கொரியாவிற்கு பிரதமருடன் வெளியுறவு அமைச்சர் டத்தோ ஸ்ரீ முகமட் ஹாசன், முதலீடு, வாணிப மற்றும் தொழில்துறை அமைச்சர் தெங்கு சஃப்ருல் மற்றும் மூத்த அரசாங்க அதிகாரிகளும் பயணிப்பதாக அவர் தெரிவித்தார்.
நேற்று, மலேசிய ஊடகவியலாளர்கள் உடனா இயங்கலை வாயிலான செய்தியாளர்கள் சந்திப்பில் சம்ரூனி காலிட் இத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
பெர்னாமா




