கென்யா, அக் 29 - கென்யாவில் இலகுரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில்11 பேர் உயிரிழந்தனர். அதில் எட்டு ஹங்கேரிய, இரண்டு ஜெர்மனிய சுற்றுப்பயணிகள் மற்றும் ஒரு கென்ய விமானி அடங்குவர்.
அவ்விமானம் அந்நாட்டு நேரப்படி காலை மணி 8.30க்கு விபத்துக்குள்ளானதாக விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தியப் பெருங்கடல் கடற்கரையில் உள்ள டியானி நகரத்திலிருந்து கென்யாவின் மாசாய் மாரா சரணாலயத்திற்குப் பயணிக்கும் சமயம் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
தென்கிழக்கு கென்யாவின் உள்ள குவாலே மாவட்டத்தில் உள்ள காட்டுப் பகுதி ஒன்றில் இந்த விமான விழுந்து நொறுங்கியது. உயிரிழந்த சுற்றுப்பயணிகள் விடுமுறைக்கு அந்நாட்டிற்கு வருகைப் புரிந்திருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்விபத்திற்கான காரணம் குறித்துக் கண்டறிய புலனாய்வாளர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக கென்யா அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதில் சம்பந்தப்பட்ட மோம்பாசா ஏர் சாபாரி விமான நிறுவனம் விசாரணைகளுக்கு ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளது.
பெர்னாமா




