புத்ராஜெயா, அக் 29: மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக உயர்நீதிமன்ற நீதிபதி கே. முனியாண்டி பதவியேற்றார்.
புத்ராஜெயாவில் உள்ள கூட்டரசு நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற பதவி உறுதிமொழி நிகழ்ச்சியில் கே. முனியாண்டி பதவியேற்று கொண்டதாக நீதிமன்ற தலைமை பதிவாளர் உறுதிப்படுத்தினார்
கே. முனியாண்டி மலாயாப் பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் மேற்கல்வியைப் பயின்று தனது வழக்கறிஞர் வாழ்க்கையைத் தொடங்கினார்.
2019ஆம் ஆண்டு பதவி உயர்வு பெற்று நீதித்துறை ஆணையர்களில் ஒருவராக அவர் நியமிக்கப்பட்டார்.
பின்னர், 2022ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.




