கோலாலம்பூர், அக் 29 - மலேசியர்கள் நாள் ஒன்றுக்கு சராசரி எட்டு மணிநேரத்தை இணையத்தில் செலவிடுகிறார்கள் என Ipsos Digital 2025 அறிக்கை தெரிவிக்கிறது.
இது தென்கிழக்கு ஆசியாவில் மிகவும் சுறுசுறுப்பான இணையப் பயனர்களில் ஒருவராக மலேசியர்களை காட்டுகிறது.
அதிக அளவிலான டிஜிட்டல் ஈடுபாடு மலேசியாவின் வளர்ந்து வரும் இணைப்பைப் பிரதிபலிக்கும் அதே வேளையில், இது இணைய சிக்கலுக்கு வழிவகுக்கிறது என்று தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.
அதாவது பாதிப்பை ஏற்படுத்தும் உள்ளடக்கம், தவறான தகவல் மற்றும் இணையக் குற்றம் தொடர்பான 15,000க்கும் மேற்பட்ட புகார்களை கடந்த ஆண்டு அமைச்சு பெற்றது.
இந்த பிரச்சனைகளை களைய, போலி செய்தி எதிர்ப்புச் சட்டம் உட்பட பல புதிய கொள்கை மற்றும் சட்ட கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
ஊடகத் துறையில் செயற்கை நுண்ணறிவின் நெறிமுறை பயன்பாட்டை வழிநடத்தவும், தவறான தகவல்களைப் பரப்புவதும் மற்றும் அதன் தவறான பயன்பாட்டைத் தடுக்கவும் ஒரு தனி AI நிர்வாக கட்டமைப்பு உருவாக்கப்பட்டு வருவதையும் ஃபஹ்மி சுட்டிக்காட்டினார்.




