ஷா அலம், அக் 28: இன்று காலை லங்காவியில் உள்ள `Ship Yard``இல் மூன்று பெர்ரி கப்பல்கள் தீயில் எரிந்து நாசமடைந்தன.
இச்சம்பவம் தொடர்பாகக் விடியக்காலை 2.29 மணிக்கு அவசர அழைப்பை பெற்றதாகப் பிரிவு 4 லங்காவியின் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் தலைவர் முகமட் ஜம்ரி அப்துல் கனி கூறினார்.
ஆறு நிமிடங்களில் சம்பவ இடத்திற்கு சென்ற போது, அங்கு மூன்று கப்பல்கள் தீயில் எரிந்து கொண்டிருந்தன என அவர் தெரிவித்தார்.
தீயை அணைக்க பலவகை உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டதோடு லங்காவி மற்றும் பாடாங் மாட் சிராட் தீயணைப்பு நிலைகளை சேர்ந்த பணியாளர்களும் ஈடுப்பட்டனர்.
இந்த விபத்தில் யாரும் காயம் அடையவில்லை. தீயின் காரணமும், ஏற்பட்ட நஷ்டமும் விசாரணையில் உள்ளது.






