கோலாலம்பூர், அக் 28 - தென் கொரியாவின் தொழில்நுட்ப மற்றும் பொருளாதாரத்துடன் இணைந்து, ஆசியானின் வளர்ச்சி திறனைப் பயன்படுத்துவதன் வழி புதிய வாய்ப்புகள், வளர்ச்சி மற்றும் திறந்த சந்தைகளை உருவாக்கும் ஓர் அமைப்பை வடிவமைக்க முடியும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்திருக்கிறார்.
பரஸ்பர நம்பிக்கை, மரியாதை மற்றும் பகிரப்பட்ட நன்மைகள் அடிப்படையாக, கடந்த 30 ஆண்டுகளாக இந்த ஒத்துழைப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் விவரித்தார்.
கடந்த 2024-ஆம் ஆண்டில், ஆசியான் மற்றும் தென் கொரியா இடையிலான வர்த்தகம் 20000 கோடி அமெரிக்கா டாலர்களை கடந்துள்ளதாகவும், இது வர்த்தக உறவுகளின் வலிமை மற்றும் மீள்தன்மையைப் பிரதிபலிப்பதாகவும் டத்தோ ஸ்ரீ அன்வார் விளக்கினார்.
"தொழில்நுட்ப இடையூறு, வியூக போட்டிகள் மற்றும் பிளவுபட்ட விநியோக சங்கிலிகள் போன்ற சூழலை நாம் சந்தித்து வருகின்றோம். ஆனால், இந்நிலைமைகளுக்கிடையில், ஆசியான் மற்றும் கொரியக் குடியரசு ஆகியவை முன்னேற்றம் வேண்டும் என்பதை அங்கீகரிக்கும் நாடுகளாகத் தனித்து நிற்கின்றன. இதன் மூலம் ஒத்துழைப்பை மூலம் மேம்படுத்த முடியும்," என்றார் அவர்.
பெர்னாமா




