சுபாங் ஜாயா, அக் 28: இன்று காலை சுபாங் ஜெயாவில் உள்ள ஜாலான் USJ 9/5K பகுதியில் உள்ள வீடொன்றின் வெளியே, புதிதாகப் பிறந்த பெண் குழந்தை ஒன்று தொப்புள் கொடியுடன் கண்டெடுக்கப்பட்டது.
இச்சம்பவம் குறித்து காலை 10.27 மணிக்கு தகவல் கிடைத்ததாக சுபாங் ஜெயா மாவட்ட காவல்துறை தலைவர், உதவி ஆணையர் வான் அஸ்லான் வான் மாமட் தெரிவித்தார்.
அக்குழந்தை மேல் சிகிச்சைக்கு ஷா அலம் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. பரிசோதனையில், குழந்தை 2.6 கிலோகிராம் எடை மற்றும் 43 சென்டிமீட்டர் நீளம் உள்ளது தெரிய வந்தது.
மேலும், குழந்தை தற்போது நலமாக உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த சம்பவம், பிறப்பை மறைத்தல் அல்லது குழந்தையை விட்டு செல்வது போன்ற குற்றங்களுக்கு உட்பட்டது. எனவே, இது குறித்து சட்டம் 317 கீழ் விசாரணை நடத்தப்படுகிறது.
இச்சம்பவத்தைப் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் இன்ஸ்பெக்டர் வானிதா பாலகிருஷ்ணனை (தொலைபேசி: 017-2229832) அல்லது சுபாங் ஜெயா மாவட்டக் காவல்துறையை (தொலைபேசி: 03-7862 7222) தொடர்பு கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகின்றனர்.




