பொந்தியான், அக் 28: நேற்று பொந்தியான் அருகிலுள்ள பெர்மாஸ் நகரில் அமைந்துள்ள பெட்ரோல் நிலையத்தில் முதியவர் ஒருவர் தனது காரின் கட்டுப்பாட்டை இழந்து அங்குள்ள கண்ணாடி கதவினை மோதினார்.
இந்த விபத்து காலை சுமார் 10.30 மணியளவில் நடந்தது என பொந்தியான் மாவட்ட காவல்துறை தலைவர் சூப்பரின்டெண்டண்ட் முகமட் ஷோஃபீ தயிப் கூறினார்.
மேலும், கியா வகை கார் ஒன்றை 86 வயதான உள்ளூர் ஆண் ஒருவர் ஓட்டி வந்ததாக சினார் ஹரியான் செய்தி வெளியிட்டது.
“முதல் கட்ட விசாரணையில், அம்முதியவர் தன் வீட்டில் இருந்து பெர்மாஸ் நகரில் உள்ள பெட்ரோல் நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்தது தெரிய வந்தது.
பெட்ரோல் நிலையத்திற்கு வந்தபோது, அவர் பிரேக் பெடலை அழுத்த நினைத்து தவறுதலாக ஆக்சிலரேட்டர் பெடலை அழுத்தியதால், கார் முன்னே சென்று கண்ணாடி கதவை மோதி உடைந்தது,” என்றார்.
இச்சம்பவத்தில் அம்முதியவரின் வலது காலில் சிறிய காயம் ஏற்பட்டது மற்றும் பொந்தியான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிறகு வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டார்.
இந்த வழக்கு 1957 சாலை போக்குவரத்து விதிகள் (விதி 10) கீழ் விசாரிக்கப்படுகிறது மற்றும் 1987 சாலைப் போக்குவரத்து சட்டப் பிரிவு 119 கீழ் கூடுதல் நடவடிக்கை எடுக்கப்படலாம்.




