ad

சிலாங்கூர் மாநிலப் பள்ளிகளில் 1,200க்கும் மேற்பட்ட ஒழுக்கமின்மை செயல்கள் பதிவு

27 அக்டோபர் 2025, 10:33 AM
சிலாங்கூர் மாநிலப் பள்ளிகளில் 1,200க்கும் மேற்பட்ட ஒழுக்கமின்மை செயல்கள் பதிவு

ஷா ஆலம், அக் 27 — இந்த ஆண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரை, சிலாங்கூர் மாநிலம் முழுவதும் தொடக்க மற்றும் இடைநிலைப் பள்ளி மாணவர்களிடையே 1,200க்கும் மேற்பட்ட ஒழுக்கமின்மை சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இதில் 265 வழக்குகள் மாணவர்களிடையேயான பகடிவதை சம்பவங்களாகவும், 954 வழக்குகள் பிற தவறான நடத்தை சம்பவங்களாகவும் உள்ளன என சிலாங்கூர் துணை காவல் தலைவர் கமிஷனர் முகமட் சைனி அபூ ஹசான் கூறினார்.

தற்போது, காவல்துறை 41 வழக்குகளில் மட்டுமே விசாரணை தொடங்கியுள்ளது. இதில் 9 பகடிவதை சம்பவங்களும், 32 பிற ஒழுக்கக்கேடு சம்பவங்களும் உள்ளன. சில வழக்குகளில் போதுமான ஆதாரங்கள் இல்லாததால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

ஷா ஆலம் தேசிய இடைநிலைப் பள்ளியில் நடைபெற்ற காலை கூட்டத்தில் பங்கேற்ற போது அவர் செய்தியாளர்களிடம் இதை தெரிவித்தார்.

பள்ளிகளில் ஏற்படும் பகடிவதை மற்றும் ஒழுக்கக்கேடு பிரச்சனைகள் சமூக சூழல் மற்றும் உணர்வு காரணங்களால் உருவாகின்றன. அதனால், இதை கவனமாக கையாள வேண்டும் என அவர் தெரிவித்தார்.

தடுப்பு நடவடிக்கைகளுக்கு சட்டம் மட்டுமல்ல; பள்ளிகள், சமூகங்கள், அரசு அமைப்புகள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோரின் ஒத்துழைப்பும் மிக முக்கியம். இதன் மூலம் மாணவர்களின் ஒழுக்கமும் சமூக பொறுப்புணர்வும் வலுப்படும்.

மாணவர்களிடையே குற்றச் செயல்கள் மற்றும் ஒழுக்கீனம் செயல்களை தடுக்கும் முயற்சிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவை அனைத்தும் பல தரப்பினரின் ஒத்துழைப்புடன் செயல்படுகின்றன.

இந்த முயற்சிக்கு மாமன்னர், பிரதமர், சிலாங்கூர் மந்திரி புசார், மலேசியக் காவல்துறை படை, கல்வி அமைச்சு, அரசு சாரா அமைப்புகள் (NGO), பெற்றோர்-ஆசிரியர் சங்கம் மற்றும் சுகாதார அமைச்சு ஆகியோர் முழு ஆதரவு அளித்து வருகின்றனர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.