கோலாலம்பூர், அக் 27 - மலேசியாவுடனான தனது வர்த்தக வாய்ப்பை அதிகரித்து, வணிக ஒத்துழைப்பை ஆழப்படுத்தவும் வர்த்தக வளர்ச்சியை வலுப்படுத்தவும் பிரேசில் அழைப்பு விடுத்துள்ளது.
பிரேசிலுக்கும் மலேசியா உள்ளிட்ட அதன் முக்கிய உறுப்பு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் சுமார் 1,200 கோடி அமெரிக்க டாலர் என்று பிரேசில் அதிபர் லுயிஸ் இனாசியோ லுலா டா சில்வா சுட்டிக்காட்டினார்.
இருப்பினும், இச்சந்தைகளின் பொருளாதார ஆற்றலுடன் ஒப்பிடுகையில் இது மிகக் குறைவு என்று அவர் குறிப்பிட்டார்.
இருதரப்பு வளர்ச்சிக்கு தனியார் துறை உந்து சக்தியாக விளங்குவதாக, இன்று 47வது ஆசியான் உச்சநிலை மாநாடு மற்றும் தொடர்புடைய உச்சநிலை மாநாடுகள் தொடர்புடைய செய்தியாளர்கள் சந்திப்பில் லுலா டா சில்வா கூறினார்.
கடந்த 2024ஆம் ஆண்டு, லத்தீன் அமெரிக்காவில் மலேசியாவின் இரண்டாவது மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக பிரேசில் இருந்த நிலையில், அதன் மொத்த இருதரப்பு வர்த்தகம் 2,036 கோடி ரிங்கிட் அல்லது 446 கோடி அமெரிக்க டாலராகும்.
பெர்னாமா




