கோலாலம்பூர், அக் 27 — எதிர்காலத்தில் உருவாகக்கூடிய சுகாதார அவசர நிலைகளுக்கு முன்னெச்சரிக்கையாக, மருத்துவ உபகரணங்களுக்கான பிராந்திய கையிருப்பு அமைப்பை விரைவுபடுத்த ஆசியான் மற்றும் அதன் பிளஸ் த்ரீ (Plus Three) உரையாடல் பங்குதாரர்களான சீனா, ஜப்பான் மற்றும் தென் கொரியா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அழைப்பு விடுத்துள்ளார்.
ஆசியான் பிராந்தியம் கோவிட்-19 பெருந்தொற்றிலிருந்து பெற்ற அனுபவங்களின் அடிப்படையில் எதிர்கால நெருக்கடிகளை சமாளிக்க மேலும் தீவிரமாக ஈடுபட்டு, ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.
எங்கள் பணி தெளிவானது மற்றும் அதன் வளர்ச்சி, செழிப்பு, முன்னேற்றம் அமைதியை கொண்டு வர வேண்டும்,” என்று இன்று கோலாலம்பூரில் நடைபெறும் 47வது ஆசியான் உச்சநிலை மாநாடு மற்றும் அதனுடன் இணைந்த 28வது ஆசியான் Plus Three உச்சநிலை மாநாட்டில் அன்வார் இதனை கூறினார்.
“கிழக்கு ஆசியா பிராந்தியம் நிலைத்த, உள்ளடக்கிய மற்றும் இணைந்ததாக இருக்க, நமது இளைஞர்கள் மற்றும் பெண்களை அதற்காகத் தயார்படுத்த வேண்டும்,” எனவும் அவர் தெரிவித்தார். மலேசியா தற்போது ஆசியான் தலைமைப் பொறுப்பை வகிக்கிறது, பிலிப்பைன்ஸ் வரும் ஜனவரி 1 முதல் அந்தப் பொறுப்பை ஏற்க உள்ளது.




