மெட்ரிட் அக் 27: லா லீகா கால்பந்து போட்டியின் எல் கிளாச்சிகோ ஆட்டம் நேற்று நடைபெற்றது. அவ்வாட்டத்தில் இரு பலம் பொருந்திய அணிகளான ரியால் மெட்ரிட், பார்சிலொனா அணிகள் மோதின.
சந்தியாகோ பார்னபவ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் ரியல்மாட்ரிட் அணியினர் பார்சிலோனா அணியை சந்தித்து விளையாடினர்
இந்த ஆட்டத்தில் ரியால் மெட்ரிட் 2-1 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா அணியை வீழ்த்தி மூன்று புள்ளிகளை வெற்றிக்கொண்டது.
ரியல்மாட்ரிட் அணியின் வெற்றி கோல்களை கிளையன் எம்பாப்பே, ஜூட் பெலிங்காம் ஆகியோர் அடித்தனர்.
மற்றொரு ஆட்டத்தில் மலோர்கா அணியினர் 1-1 என்ற கோல் கணக்கில் லெவான்தே அணியுடன் சமநிலை கண்டனர்.
மற்ற ஆட்டங்களில் கெல்தா விகோ, ராயோ வலாகனோ ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.
லா லீகா போட்டியின் புள்ளிப்பட்டியலில் ரியால் மெட்ரிட் அணி 27 புள்ளிகளுடன் முதல் இடத்திலும் 22 புள்ளிகளுடன் பார்சிலோனா அணி இரண்டாவது இடத்திலும் வில்லாரியால் அணி 20 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் இடம்பெற்றுள்ளன.




