கோலாலம்பூர், அக் 26 – அரச மலேசிய காவல் துறை அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்களின் சீருடை தையல் கூலி கோரிக்கைத் தொகை செலுத்தும் செயல்முறையை விரைவுபடுத்த சிறந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த விவகாரத்தில் குழுவினரின் கவலைகளை அரச மலேசிய காவல் துறை நன்கு புரிந்துள்ளது. மேலும் உள்துறை அமைச்சு மற்றும் தொடர்புடைய மைய அமைப்புகளுடன் இணைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக புக்கிட் அமான் தளவாட மற்றும் தொழில்நுட்பத் துறை (JLog) இயக்குநர் கில்பர்ட் பிலிப் லயாங் தெரிவித்தார்.
காவல் துறையின் நலன் எப்போதும் முன்னுரிமையாகக் கருதப்படுகிறது. நிதி மற்றும் கொள்முதல் நடைமுறைகளின் அடிப்படையில், அனைத்து கோரிக்கைகளும் விரைவில் முடிவுக்கு கொண்டு வரப்படும் வகையில் ஒருங்கிணைப்பு முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
மேலும் பொது சேவையின் நலக் கோட்பாடு மற்றும் மடாணி உணர்வுடன் இணைந்து, ஒவ்வொரு அதிகாரி மற்றும் உறுப்பினரின் நலனும் உறுதியாகப் பாதுகாக்கப்படும் என அரச மலேசிய காவல் துறை தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்படும்,” என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறினார்.
இந்த நிலைமை, நாட்டின் பாதுகாப்பை உறுதிசெய்யும் போலீஸ் துறையின் முக்கியப் பொறுப்புகள் மற்றும் தயார் நிலையை பாதிக்காது என்றும், குறிப்பாக 2025ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள பல சர்வதேச நிகழ்வுகளை முன்னிட்டு உறுதியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.




