கோலாலம்பூர், அக் 26: தாய்லாந்து மற்றும் கம்போடியா நாடுகள் இன்று “Delivering Peace – Cambodia–Thailand Peace Deal” என்ற அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இது இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைப் பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்து அமைதியை மீட்டெடுக்கும் அதிகாரப்பூர்வமான ஒரு முக்கியமான படியாகும்.
அமைதி ஒப்பந்தத்தில் தாய்லாந்து பிரதமர்அனுடின் சார்ன்விரகுல் மற்றும் கம்போடியா பிரதமர் ஹுன் மனெட் ஆகியோர் கையெழுத்திட்டனர். இந்த நிகழ்வு இன்று கோலாலம்பூரில் தொடங்கிய 47வது ஆசியான உச்சநிலை மாநாடு மற்றும் அதனுடன் தொடர்புடைய மாநாடுகளின் வெளியே நடைபெற்றது.
இந்த ஒப்பந்த கையெழுத்து நிகழ்வை ஆசியான தலைவராக மலேசிய பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர்முன்னிலையில் நடைபெற்றது.
மலேசியா, 1967 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட ஆசியான அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்த ஆண்டில் ஐந்தாவது முறையாக ஏற்றுள்ளது. இதற்கு முன்பு 2015, 2005, 1997 மற்றும் 1977 ஆகிய ஆண்டுகளிலும் மலேசியா ஆசியான மாநாட்டை நடத்தி இருந்தது.




