கோலாலம்பூர், அக் 26: பேராக், கெடா மற்றும் பினாங்கு மாநிலங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளநிலை இன்னும் முழுமையாக சீராகாத நிலையில் உள்ளது. இதனால் மூன்று மாநிலங்களிலும் தற்காலிக இடம்பெயர்வு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களின் எண்ணிக்கை நேற்று இரவுடன் ஒப்பிடுகையில் சிறிதளவு அதிகரித்து, இன்று காலை 5,850 பேராக உயர்ந்துள்ளது.
பேராக் மாநில பேரிடர் மேலாண்மை குழு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக கூறப்பட்டுள்ளது. இன்று காலை 9 மணி நிலவரப்படி 19 மையங்களில் 602 குடும்பங்களைச் சேர்ந்த 1,934 பேர் தங்கியுள்ளனர், இது நேற்று இரவு 525 குடும்பம் (1,708 பேர்) காட்டிலும் அதிகம். இதனுடன் மேலும் ஆறு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
மேலும் கூலிம் மாவட்டம் அதிகளவு பாதிப்பைச் சந்தித்துள்ளது. வெள்ள பொது தகவல் இணையதளத்தில் தெரிவித்ததாவது, கெடா மாநிலத்தில் ஐந்து ஆறுகள் அபாய அளவை மீறியுள்ளன. அவை பெண்டாங் ஆறு (3.51மீ), கிரிக் ஆறு (14.21மீ), லாகா ஆறு (22.11மீ), மற்றும் படாங் தெராப் ஆறு (4.05மீ).
பினாங்கு மாநிலத்தில், இன்று காலை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சிறிதளவு குறைந்து, மூன்று மாவட்டங்களில் அமைந்துள்ள ஏழு மையங்களில் 295 குடும்பங்களைச் சேர்ந்த 1,049 பேர் தங்கியுள்ளனர்.
சமூக நலத் துறையின் இணையதளத்தின் தகவலின்படிசெபராங் பிறை உத்தாரா மாவட்டம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு நான்கு மையங்களில் 217 குடும்பங்களைச் சேர்ந்த 781 பேர் தங்கியுள்ளனர். செபராங் பிறை தெங்கா மாவட்டத்தில் இரண்டு மையங்களில் 68 குடும்பங்களைச் சேர்ந்த 234 பேர் உள்ளனர்.




