ad

சிலாங்கூரின் தனித்துவமான அடையாளத்தை சுற்றுப்பயணிகளுக்கு ஈர்ப்பாக முன்னிறுத்த வேண்டும்.

26 அக்டோபர் 2025, 3:49 AM
சிலாங்கூரின் தனித்துவமான அடையாளத்தை சுற்றுப்பயணிகளுக்கு ஈர்ப்பாக முன்னிறுத்த வேண்டும்.
சிலாங்கூரின் தனித்துவமான அடையாளத்தை சுற்றுப்பயணிகளுக்கு ஈர்ப்பாக முன்னிறுத்த வேண்டும்.
சிலாங்கூரின் தனித்துவமான அடையாளத்தை சுற்றுப்பயணிகளுக்கு ஈர்ப்பாக முன்னிறுத்த வேண்டும்.

கோலா லங்காட், 26 அக் — மாநில அரசு, சிலாங்கூர் மாநிலத்தின் தனித்துவமான அடையாளமான உணவு, இசை, உடை மற்றும் கலைகளை உள்நாட்டு சுற்றுலா ஈர்ப்பாக வெளிப்படுத்துமாறு 12 உள்ளூராட்சிக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்த முயற்சி மாநில நிர்வாகக் குழு எடுத்த முடிவுடன் இணங்குவதாக சிலாங்கூர் வீடமைப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் போர்ஹான் அமான் ஷா தெரிவித்தார். அதன்படி, ஒவ்வொரு வருகை தரும் சுற்றுப்பயணிகளுக்கு உள்ளூர் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தின் சிறப்பை வெளிப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.

“சிலாங்கூருக்கு தனித்துவமான அடையாளம் உள்ளது. உதாரணமாக, ரொங்கேங் நடனம், புண்டென், நாசி அம்பெங் மற்றும் காஜாங் ஸாதே போன்ற பாரம்பரிய உணவுகள், மேலும் மஹ்மேரி மற்றும் செம்புலிங் இசை போன்றவை,” என்று அவர் நேற்று நடைபெற்ற Budaya@Komuniti: Pasar Mui Mahmeri 2025 நிகழ்ச்சியில் உரையாற்றிய போது கூறினார். .

இந்த முயற்சி மாநிலத்தின் கலாச்சார அடையாளத்தின் மீதான பெருமையை ஊக்குவிப்பதுடன், உள்ளூர் தயாரிப்புகளைப் பிரசாரம் செய்வதன் மூலம் பொருளாதார வளர்ச்சிக்கும் உதவியாக இருக்கும்.

மேலும் அடுத்த ஆண்டில் ஆர்டிஎம் (RTM) உடன் இணைந்து, தேசிய மட்டத்தில் Orang Asli Battle of the Band போட்டியை நடத்துவதற்கும், அதை நேரலையாக ஒளிபரப்புவதற்கும் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் அறிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.