கோலாலம்பூர், அக் 25 - இன்று நள்ளிரவு 12.01 மணி முதல் கிழக்கு கிள்ளான் பள்ளத்தாக்கு விரைவுச்சாலை (EKVE) பிரிவு 1இல் டோல் கட்டண வசூல் அமலுக்கு வருகிறது.
கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி அந்த விரைவுச் சாலை திறக்கப்பட்டதிலிருந்து பயணிகள் இலவசமாகப் பயன்படுத்திய சலுகை இன்றுடன் முடிவடைகிறது.
இந்த நெடுஞ்சாலை அம்பாங், உலு லங்காட் மற்றும் சுங்கை லாங் பகுதிகளை இணைக்கும் முக்கிய பாதை எனவும் EKVE நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், இனி EKVE பிரிவு 1இல், டோல் கட்டணம் முற்றிலும் மின் கட்டண முறையில் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் பயணிகள் பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் டோல் பிளாசாவிலுள்ள வழிகாட்டி பலகைகளை பின்பற்றுமாறு EKVE நெடுஞ்சாலை மேலாண்மை அறிவுறுத்தியுள்ளது.




