கோலாலம்பூர், அக் 25 — புத்ராஜயா ``MRT``இரயில் பாதையில் சிக்னல் மேம்பாட்டு பணிகளால் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட சேவையை மீட்டெடுக்க ரபிட் ரெயில் குழு பணியாற்றி வருகின்றனர்.
அதுமட்டுமில்லாமல், பயணிகளுக்காக, குவாசா டமன்சாரா முதல் புத்ராஜெயா சென்ட்ரல் வரை 40 இலவச ஷட்டிள் பேருந்துகள் இயங்கும் என தெரிவிக்கப் பட்டது.
திதிவங்சா ``MRT`` பயணிகள் அம்பாங் / ஸ்ரீ பெட்டாலிங் பாதையை மற்றும் மோனோரெய்லை மாற்று வழிகளாகப் பயன்படுத்தலாம். அதே சமயம் KLCC மற்றும் அம்பாங் பார்க் ``MRT`` பயணிகள் கிளானா ஜெயா பாதையை பயன்படுத்தலாம்.
KLIA செல்லும் பயணிகள், பண்டார் தாசிக் செலாத்தான் சென்ற பிறகு TBSஇல் இருந்து ERL சேவையைப் பயன்படுத்தலாம்.
தற்காலிகமாக, க்வாசா டமன்சாரா நிலையத்திலிருந்து புத்ராஜயா சென்ட்ரல் வரை இரயில்கள் கைமுறையாக இயக்கப்படுகின்றன மற்றும் பயணிகள் பாதுகாப்பாக பயணம் செய்ய ஒவ்வொரு நிலையத்திலும் இரயில் நீண்ட நேரம் நிற்கும்.
“எச்சரிக்கை நடவடிக்கையாக, உதவி காவல்துறையினர் மற்றும் நிலைய பணியாளர்கள் பயணிகளுக்கு உதவ நியமிக்கப்பட்டுள்ளனர்,” என ரபிட் ரெயில் தெரிவித்துள்ளது.
பயணிகள் கூடுதல் தகவல்களுக்கு ரபிட் கேல் சமூக ஊடகப் பக்கத்தை நாடலாம். மேலும், இடையூறுக்கு ரபிட் கேல் மன்னிப்பு கேட்டுள்ளது.




