ஷா ஆலம், அக் 25 — பந்திங் பாரு பகுதியில் ஐந்து மாடுகள் சாலையில் சுற்றி திரிந்து பொதுமக்களின் அமைதியை கெடுத்தன. அம்மாடுகளை கோலா லங்காட் நகராண்மை கழகம் உடனடி நடவடிக்கை எடுத்து பிடித்தது.
இந்த நடவடிக்கை சாலையில் பயணிகளின் பாதுகாப்பையும் பொதுமக்களின் அமைதியையும் உறுதி செய்யும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டது என கோலா லங்காட் நகராண்மை கழகம் தெரிவித்தது.
பொதுமக்கள் புகார் அளித்ததன் பேரில், 10 உறுப்பினர்களைக் கொண்ட அமலாக்கக் குழு இந்த நடவடிக்கையை செயல்படுத்தியது.
அனுமதியில்லாமல் மாடுகள் சுற்றி திரிந்ததால், MDKL 1971 சட்டம் பிரிவு 5(1) கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மேலும், கைப்பற்றும் நடவடிக்கை அதே சட்டப் பிரிவு 4(1)(a) கீழ் செயல்படுத்தப்பட்டு அம்மாடுகள் நகராண்மை கழகக் கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக்கொள்ளப்பட்டன.
மாடு வளர்ப்பவர்கள் விதிமுறைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தி, நகர்ப்பகுதியில் பாதுகாப்பும் சுத்தமும் பராமரிக்கப்பட வேண்டும் என்று கோலா லங்காட் நகராண்மை கழகம் வலியுறுத்தியுள்ளது.




