ad

இந்தோனேசிய சர்வதேச விமான நிலையத்தில் சிக்கிய மலேசிய மாணவர்களுக்கு உடனடி உதவி

25 அக்டோபர் 2025, 4:22 AM
இந்தோனேசிய சர்வதேச விமான நிலையத்தில் சிக்கிய மலேசிய மாணவர்களுக்கு உடனடி உதவி

ஜகார்த்தா, அக் 25 - இந்தோனேசிய சர்வதேச விமான நிலையத்தில் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக சிக்கிய 61 மலேசிய மாணவர்களுக்கு மலேசிய தூதரகம் உடனடி உதவி வழங்கியுள்ளது.

அந்த மாணவர்களை வரவேற்க வேண்டியிருந்த உள்ளூர் பயண முகவர் வராததால் இந்த சம்பவம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவம் குறித்த தகவல் கிடைக்கப்பெற்ற உடனே தூதரகம் உடனடி நடவடிக்கை எடுத்து, அருகிலுள்ள ஹோட்டலில் தங்கும் வசதியையும் போக்குவரத்தையும் மாணவர்களுக்காக ஏற்பாடு செய்தது.

இதனிடையே மாணவர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் என்றும், அவர்களின் கல்விச் சுற்றுப்பயணம் திட்டமிட்டபடி தொடரும் என்றும் மலேசிய தூதர் டத்தோ ஷெட் முகமட் ஹஸ்ரின் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட மலேசிய பயண நிறுவனம் ஜகார்த்தாவிற்கு வந்து பிரச்சனையைத் தீர்க்கும்.

மேலும், மாணவர்கள் நாடு திரும்பும் வரை தூதரகம் நிலைமையை தொடர்ந்து கண்காணிக்கும் என்றும் அவர் விளக்கினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.